தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆய்வாளர்கள்: கரியமிலவாயு தூய்மைக்கேடு இவ்வாண்டு மோசமடையும்

1 mins read
816c6a15-33a9-4b76-8af7-0fa7a31bae09
கரியமிலவாயு வெளியேற்றம் குறைய வேண்டிய நிலையில் அது அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். - படம்: இபிஏ

பாரிஸ்: கரியமிலவாயு வெளியேற்றம் இவ்வாண்டு சுமார் 1% அதிகரித்து என்றும் இல்லாத புதிய உச்சத்தை அடையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பத்தாண்டுகளில் கரியமிலவாயுவால் ஏற்படும் தூய்மைக்கேடு, கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன்வழி உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கும் பேரழிவுக்குரிய பருவநிலைத் தாக்கங்களைத் தவிர்ப்பதற்கும் உலகநாடுகள் கொண்டுள்ள இலக்குகளை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.

அனைத்துலக கரியமிலவாயு வெளியேற்றம் இவ்வாண்டு 5% குறைய வேண்டியுள்ளது என்று நார்வேயைச் சேர்ந்த பருவநிலை ஆய்வாளர் டாக்டர் கிளென் பீட்டர்ஸ் குறிப்பிட்டார்.

ஆனால், அவரின் ஆராய்ச்சியின்படி தொடர்ந்து வெளியேற்றம் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், வெளியேற்றம் 2023ல் குறையும் சாத்தியம் அதிகமில்லை என்று டாக்டர் பீட்டர்ஸ் ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, பல நாடுகள் காற்றுத் தூய்மைக்கேட்டைத் தங்களின் தேசிய பருவநிலைத் திட்டங்களில் சேர்க்கவில்லை என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்