தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரிசி உற்பத்தியை அதிகரிக்க மலேசியா புதிய திட்டங்களை ஆராய்கிறது

1 mins read
19cb552d-a07f-429f-b65f-d487bd809b52
மலேசியாவின் செகிஞ்சனில் உள்ள வயலில் ஊழியர்கள் களை எடுக்கின்றனர். - படம்:ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாயத்தை, குறிப்பாக நெல் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடப்பிலுள்ள திட்டங்களை மேம்படுத்துவதற்கும் மலேசிய வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு, புதிய விளை நிலங்களை அடையாளம் காண்பது, அதிக விளைச்சலுக்கான புதிய விவசாய முறைகளைக் கண்டறிவது உள்ளிட்ட உற்பத்தியைப் பெருக்குவதற்கான பல திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கும் என்று அமைச்சர் முகமது சாபு கூறினார்.

2024ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக இந்த முன்னெடுப்புகள் அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

செகிஞ்சனில் உள்ள ஓர் ஆலையில் புல்டோசர் மூலம் நெல் அள்ளிக்கொட்டப்படுகிறது.
செகிஞ்சனில் உள்ள ஓர் ஆலையில் புல்டோசர் மூலம் நெல் அள்ளிக்கொட்டப்படுகிறது. - படம்:ராய்ட்டர்ஸ்

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, உணவு உத்தரவாத அமைச்சுக்கு 617 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது ஒதுக்கப்பட்ட 539 கோடி ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் இது 14.4 விழுக்காடு அதிகமாகும்.

விளைச்சலை அதிகரிப்பதற்கு உயர்கல்வி நிலைய கல்வியாளர்களுடன் விவாதித்து வருவதோடு நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் நெல் ,காய்கறிகளைப் பயிரிடுவதற்கு தேவையான புதிய நிலங்களை அடையாளம் காணும் முயற்சியிலும் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

செகிஞ்சன் அருகே உள்ள ஓர் அரிசி ஆலையில் பேக்கிங் வேலை செய்யும் ஊழியர். வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு நாட்டின் போதுமான அரிசி விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
.
செகிஞ்சன் அருகே உள்ள ஓர் அரிசி ஆலையில் பேக்கிங் வேலை செய்யும் ஊழியர். வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு நாட்டின் போதுமான அரிசி விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. . - படம்: பெர்னாமா
குறிப்புச் சொற்கள்
அரிசிவேளாண்மைமலேசியா