தெற்கு காஸாவில் உதவி கிடைக்கும்: இஸ்ரேல் அறிவிப்பு

தெற்கு காஸாவில் உதவி கிடைக்கும்: இஸ்ரேல் அறிவிப்பு

1 mins read
a516114a-a18f-4bd1-b04a-a05abec2b3e7
இஸ்ரேலியத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன தாயும் மகளும். - படம்: ராய்டர்ஸ்

ஜெருசலம்: வான்வழித் தாக்குதலால் புகலிடம் தேடி வடக்குப் பாலஸ்தீனத்தைவிட்டு வெளயேறிய ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், இஸ்ரேலின் அறைகூவலின்படி தெற்கு பாலஸ்தீனத்திற்குச் சென்றுவிட்டனர்.

அவர்கள் கான் யூனிஸ் பகுதியில் ஐக்கிய நாட்டு அமைப்பு ஏற்படுத்தியிருக்கும் பள்ளி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் கிடைக்கும் என்ற இஸ்ரேல் மேல்விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராகத் தரைப்படைகளுடன் காஸாவின் வடக்குப் பகுதிகளை தாக்கத் திட்டமிடும் இஸ்ரேல் சொந்த பாதுகாப்புக்காகப் பாலஸ்தீனியர்களை தெற்கு காஸாவுக்குச் சென்றுவிடும்படி அறிவித்துவருகின்றது.

தெற்கு காஸ்ஆவில் உள்ள அல் மாவாசி என்ற பகுதியில் மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என்று இணையத்தில் இஸ்ரேல் புதிதாகப் பதிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்