இரண்டுவாரத்துக்கு முன்பிருந்ததைவிட, வாகன உரிமக் கட்டணங்கள் மூன்று வகைப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்டன.
1,600 சிசிக்கும் மேற்பட்ட பெரிய கார்களுக்கும் 110 கிலோவாட்டுக்கும் மேற்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குமான உரிமக் கட்டண விலை $150,001ல் முடிந்தது.
இது முந்தைய ஏலத்தைவிட 2.74% அதிகம்.
பொதுப்பிரிவில் (மோட்டார் சைக்கிள் தவிர்த்து) முந்தைய ஏலத்தைவிட 3.95 % கூடுதலாகி உரிமக் கட்டணம் $158,000ஐ தொட்டுள்ளது.
இத்தொகை முன்பிருந்த உரிமக் கட்டணத்தைவிட மிக அதிகமாகும். வரலாற்றில் தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த அளவுக்கு உரிமக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
1,600 சிசி வரையிலான இயந்திரங்களைக் கொண்ட சிறிய கார்களுக்கும் 110 கிலோவாட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்வாகனங்களுக்குமான சான்றிதழ் கட்டணம் $106,000ஆகக் கூடியது. இதுவும் சென்ற மாத ஏலத்தைவிட 1.92% அதிகம்.
வர்த்தக வாகனப் பிரிவுக்கான சான்றிதழ் கட்டணம் 1.29% குறைந்து $84,790 ஆக நின்றது. ஏலத்தில் குறைந்த ஒரே உரிமக் கட்டணம் இதுமட்டும்தான். மோட்டார்சைக்கிளுக்கான சான்றிதழ் கட்டணம் 3.18 விழுக்காடாக $10,856 என்று உயர்ந்தது.