மலேசியாவின் புகழ்பெற்ற ஜென்டிங் ஹைலண்ட்சுக்குச் செல்லும் வாகனமோட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நாட்டு சின் சியூ டெய்லி செய்தி நிறுவனம் வியாழக்கிழமையன்று தெரிவித்தது.
ஜென்டிங்கை நோக்கிச் செல்லும் சாலையில் செல்லும்போது வாகனமோட்டிகள் ஒருமுறை இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டது.
‘ஜென்டிங் மலேசியா’வின் துணை நிறுவனமான ‘லிங்காரான் செக்காப்’, இந்தக் கட்டணத்தை வசூலிக்கும். இதன்கீழ் ஸ்கைவோர்ல்ட்ஸ் கேளிக்கைப் பூங்காவும் ரிசோர்ட்ஸ் வோர்ல்டு ஜென்டிங்கின் சூதாட்டக் கூடங்களும் இயங்கி வருகின்றன.
சாலை 1960களில் கட்டப்பட்டு தனியார் முறையில் பராமரிக்கப்பட்டதாக லிங்காரான் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கட்டணத் தொகை குறித்தும் கட்டணம் எப்போது முதல் நடப்புக்கு வரவுள்ளது என்பது குறித்தும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

