தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனியப் போரில் ஈடுபட்டுள்ள துருப்பினரின் ராணுவத் தலைமையகத்திற்குச் சென்ற ரஷ்ய அதிபர் புட்டின்

1 mins read
e3e581b0-aae2-40c3-b0b6-d7ab03fafb75
ரோஸ்டோவ்-ஆன்-டோன் நகரில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகத்தில் அதிபர் விளாடிமிர் புட்டின் (வலது), ஜெனரல் வெலரி ஜெராசிமோவைச் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், நாட்டின் தென்பகுதியில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டோன் நகரில் உள்ள ரஷ்யப் படைகளின் தலைமையகத்திற்குச் சென்றுள்ளார்.

வியாழக்கிழமை (அக். 19) அவர் அங்கு சென்றதாகவும் உக்ரேனியப் போர் குறித்த தகவல்களைக் கேட்டறிந்ததாகவும் ரஷ்ய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.

செயல்திட்டத்தின்படியே துருப்பினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக, உக்ரேனியப் போருக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் வெலரி ஜெராசிமோவ் அதிபரிடம் கூறியதாகத் தெரிகிறது.

உக்ரேனியப் படைகளின் பதில் நடவடிக்கைகள் முழுமையான தோல்வியைச் சந்தித்ததாகவும் அந்நாட்டை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுக் குரல் வலுவிழந்திருப்பதாகவும் திரு புட்டின் இந்த வாரத் தொடக்கத்தில் கூறினார்.

ஆனால், கிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டதாகவும் தென்பகுதியில் தங்கள் தரப்பு முன்னேறியிருப்பதாகவும் உக்ரேனிய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கூறுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்