தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நட்பின் ஆழத்தை மறக்கக்கூடாது: வியட்னாமுக்கு சீனா நினைவூட்டல்

2 mins read
d4504820-8935-43b2-b52d-bcbcc9683e80
படம்: - ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: பாரம்பரியமிக்க நட்புறவின் உண்மையான நோக்கத்தை என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வியாட்னாமுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (அக்.20) சீனா சென்ற வியாட்னாமிய அதிபர் வோ வான் துவாங்விடம் சீன அதிபர் ஸி ஜின் பிங் இவ்வாறு கூறினார்.

நிரந்தரமற்ற அனைத்துலக நிலவரத்தையும் சவால்மிக்க உள்நாட்டு மேம்பாட்டையும் கருத்தில்கொண்டு, இரு நாடுகளும் இணைந்து செயலாற்றி, தங்கள் நட்புறவின் உள்நோக்கத்தை நிலைநாட்டவேண்டும் என்றார் சீன அதிபர்.

1950 முதல் சீனாவும் வியட்னாமும் அரசதந்திர உறவைத் தொடங்கின. இருநாடுகளுக்கும் இடையே 1979ல் சிறிதுகாலம் போரும் நடந்தது. ஒருகாலத்தில் (1946 முதல் 1954 வரை) காலனித்துவத்தால் வியாட்னாமை அடக்கியாண்ட பிரான்ஸை எதிர்க்க சீனா உதவியது. பிறகு, அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கிய சைகானுடன் நடந்த (தென் வியாட்னாம்) போரிலும் சீனா பெரிதும் உதவியுள்ளது. இரு நாடுகளும் கம்யூனிசத்தைப் பின்பற்றுகின்றன.

வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிபர் துவாங், சீனாவின் சர்வதேச “பெல்ட் அன்ட் ரோட்” (சாலை, கடல் வர்த்தக உள் கட்டமைப்பு) கருத்தரங்கில் பங்கேற்ற பிறகு சீன அதிபருடன் சந்திப்பை மேற்கொண்டார்.

ரஷ்ய அதிபர் புட்டின், அதிபர் துவோங்கின் அழைப்பை ஏற்று, விரைவில் வியட்னாம் வரவிருப்பதாக அதன் தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு “பெல்ட் அன்ட் ரோட்” கருத்தரங்கில் இரு நாட்டு அதிபர்களுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்