கோலாலம்பூர்: மலேசியக் காவல்துறையினர், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மோசடித் தொலைபேசி அழைப்புகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,160 பேரைத் தடுத்து வைத்தனர்.
பெர்னாமா செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டோரில் 791 பேர் மலேசியர்கள். 300 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இந்தோனீசியர்கள் 20 பேர்.
மேலும், தைவானைச் சேர்ந்த 13 பேர், பங்ளாதேஷைச் சேர்ந்த எட்டுப் பேர், வியட்னாமியர்கள் அறுவர், பாகிஸ்தானைச் சேர்ந்த நால்வர், தாய்லாந்து நாட்டவர்கள் மூவர், சிங்கப்பூரர்கள் மூவர், பிலிப்பீன்சைச் சேர்ந்த இருவர், இந்தியாவைச் சேர்ந்த இருவர், பிரிட்டன், பிரான்ஸ், நைஜீரியா, நேப்பாளம், தென்கொரியா, கஸகிஸ்தான், ஜோர்தான், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவர் எனப் பலரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 501 பேர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 659 பேரிடம் விசாரணை தொடர்கிறது. சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

