தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியப் பள்ளிகளில் நிம்மதிப் பெருமூச்சு

1 mins read
6380d08e-ccae-434f-a7b0-6f9ac8c23ce3
பராமரிக்கப்படாத, அசுத்தமான கழிவறையுடன் ஒப்பிட்டுக் காட்டப்படும் தற்போதைய புதுப்பொலிவு பெற்றுள்ள கழிவறை. - படம: நூர் ஹலிம் கோமாரி ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: அரசுப் பள்ளிக் கழிவறைக்குள் அடியெடுத்து வைக்கவே மலேசிய மாணவர்கள் நடுங்குவர். அங்குள்ள வசதிகள் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் இருந்ததே அதற்குக் காரணம்.

ஆனால், மலேசியாவின் 8,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிலவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அந்நாட்டு அரசாங்கம் ஜூலை மாதம் 650 மில்லியன் ரிங்கிட் (S$187 மி.) தொகையைப் பள்ளிக் கழிவறை மேம்பாட்டுத் திட்டத்துக்கென ஒதுக்கியதை அடுத்து மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட 7,544 பள்ளிகளில் கழிவறைகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. மேம்பாட்டுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட 8,354 பள்ளிகளில் இது 90.3 விழுக்காடாகும்.

அனைத்துப் புதுப்பிப்புப் பணிகளும் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்