தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சன்னலோர இருக்கைகளில் அமரும் விமானப் பயணிகளுக்கு முன்னுரிமை

1 mins read
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்களில் நடப்புக்கு வரும் மாற்றம்
4f186308-0500-40a4-bfa7-6766ace125a2
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்களில் வியாழக்கிழமை முதல் இந்த மாற்றம் நடப்புக்கு வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ‘எக்கானமி கிளாஸ்’ பிரிவில் சன்னலோர இருக்கைகளில் அமரும் பயணிகள் விமானத்தில் ஏற முன்னுரிமை அளிக்க அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிடுகிறது.

வரும் வியாழக்கிழமை நடப்புக்கு வரும் இந்த மாற்றத்தின் மூலம், ஒவ்வொரு விமானத்திலும் பயணிகள் ஏறுவதற்கான நேரம் இரண்டு நிமிடங்கள் வரை குறையக்கூடும். உள்நாட்டு, சில அனைத்துலக விமானச் சேவைகளுக்கு இந்த மாற்றம் பொருந்தும்.

நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் பகிரப்பட்ட குறிப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

சன்னலோர இருக்கைகளில் அமரும் பயணிகளுக்கு அடுத்ததாக நடுப்புற இருக்கைகளில் அமருவோரும் நடைபாதையோர இருக்கைகளில் அமருவோரும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர். குடும்பமாக பயணம் மேற்கொள்வோர் ஒன்றாகச் சேர்ந்து விமானத்தில் ஏறலாம்.

‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’, ‘பிஸ்னஸ் கிளாஸ்’ பிரிவுகளில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான நடைமுறையில் மாற்றம் எதுவும் இல்லை. உடற்குறையுள்ளோர், குழந்தைகளுடன் பயணம் செய்வோர், பெரியவர் உடன் இல்லாமல் பயணம் செய்யும் சிறுவயதினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் விமானத்தில் முதலில் ஏறுவதற்கான நடைமுமுறையிலும் மாற்றம் இல்லை.

சன்னலோர இருக்கைகளில் அமரும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறையை ஐந்து விமான நிலையங்களில் சோதித்துப் பார்த்த யுனைடெட் ஏர்லைன்ஸ், அது ஆக்ககரமாக இருப்பதைக் கண்டறிந்தது.

குறிப்புச் சொற்கள்