உலகின் ஆக வயதான நாய் 31வது வயதில் காலமானது.
அதன் பெயர் பாபி. போர்ச்சுகலின் லெய்ரியாவைச் சேர்ந்த பாபி, இதுவரை பதிவான நாய்களில் ஆக வயதானது.
அமெரிக்காவைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டாக்டர் கேரென் பெக்கர், பாபி இறந்த செய்தியை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
உலகில் அதிகமானோர் பின்தொடர்ந்த கால்நடை என்று அவர் குறிப்பிட்டார்.
பாபியை விரும்பியவர்களுக்கு பாபி வாழ்ந்த காலம் போதாது என்று அவர் கூறினார். பாபி மொத்தம் 11,478 நாள்கள் பூமியில் வாழ்ந்துள்ளது. நாய்கள் சராசரியாக 14 ஆண்டுகள் உயிர் வாழக் கூடியவை.
கடந்த பிப்ரவரியில் பாபிக்கு அதிக காலம் உயிர் வாழ்ந்த நாய் என்று கின்னஸ் சாதனை விருது அளிக்கப்பட்டது.
அப்போது டாக்டர் பெக்கர், பாபியைச் சந்தித்தார்.
அந்த சமயத்தில் பாபிக்கு வயது 30 ஆண்டுகள், 266 நாள்கள்.
சென்ற மே 11ஆம் தேதி 31வது வயதை அடைந்தபோது பாபியின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

