அங்காரா: அஸர்பைஜான், தமது நெருங்கிய நட்பு நாடான துருக்கியுடன் தொடர் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நாகோர்னோ-கரபாக்கில் இருந்து பிரிந்த பாக்கு வட்டாரத்தை மீண்டும் கைப்பற்றிய பிறகு அஸர்பைஜான் மேற்கொள்ளும் முதல் கூட்டு ராணுவப் பயிற்சியாகும்.
நவீன துருக்கியின் நிறுவனரான முஸ்தபா கெர்னல் அடாடர்க்கின் பெயரே ராணுவப் பயிற்சிக்குச் சூட்டப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 3,000 ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்பர் என்று அஸர்பைஜான் தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“பாக்கு வட்டாரம் உட்பட அஸர்பைஜான் முழுவதும் பயிற்சி நடக்கிறது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
துருக்கி, அஸர்பைஜானுடன் நெருக்கமான கலாசாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆர்மினியாவுடன் இருந்த முப்பது ஆண்டுகால சச்சரவில் அஸர்பைஜானுக்கு அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.
இந்த நிலையில் ஆர்மினியாவும் அஸர்பைஜானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன. கரபாக்கில் அஸர்பைஜானின் வெற்றிக்குப் பிறகு இரு தரப்பு சச்சரவுகளுக்கு முடிவுகட்ட இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

