ஜெருசலம்: காஸாவில் உள்ள மருத்துவமனையை இஸ்ரேல்தான் குண்டுகளை வீசித் தாக்கியது என்று ஹமாஸ் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் ஐந்து நாளான பிறகும் ஹமாஸ் ஆதாரம் எதையும் வெளியிடவில்லை.
சம்பவ இடத்தில் வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மருத்துவமனையில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கு ஆதாரங்களைத் தர முடியவில்லை என்று ஹமாஸ் கூறியது.
செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனை தாக்கப்பட்ட சில மணி நேரங்களில் அல் அஹ்லி அரபு மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கியதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், ஊழியர்கள், தஞ்சமடைந்தவர்களில் பலர் குண்டு வீச்சில் உயிரிழந்தனர்.
ஹமாஸின் குற்றச்சாட்டை உடனே இஸ்ரேல் மறுத்தது.
ஆனால் அதற்குள் மத்திய கிழக்கில் மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஹமாஸ் குற்றச்சாட்டுக்கு மாறாக ஆதாரங்கள் கிளம்பியதால் தற்போது மருத்துவமனைத் தாக்குதலுக்கு காஸா அதிகாரிகள் மற்றொரு கதையைக் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் 500 முதல் 833 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. ஆனால் உயிரிழந்தவர்களின் மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.

