கம்போடியா: நீர் மின்சக்தி குறைபாட்டை சரிசெய்ய சூரியசக்தி

கம்போடியா: நீர் மின்சக்தி குறைபாட்டை சரிசெய்ய சூரியசக்தி

1 mins read
d94510c9-d5ef-40de-adf7-f5cd9d849795
கம்போடிய தலைநகர் நோம் பென்னில் திறந்தவெளியில் தற்காலிகமாக உணவு உண்ணும் இடம் ஒன்றில் கூடியிருக்கும் மக்கள். - படம்: ஏஃப்பி

நோம்பென்: கம்போடியாவில் மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில், நீர் மின்சக்தி உற்பத்திக் குறைபாட்டை சரிசெய்ய அந்நாடு சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டங்களை அதிகரித்து வருகிறது.

அத்துடன், அண்டை நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள மின் கட்டமைப்பு வசதிகளுடன் அது மற்ற நாடுகளிடமிருந்து மின்சாரத்தை பெறுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இதை அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கம்போடியாவில் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் பாதி அளவு நீர் மின்சக்தி மூலம் கிடைக்கிறது. ஆனால், பருவநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் நீர் மின்சக்தி உற்பத்தி ஏற்ற இறக்கமாக உள்ளது. இதனால், மாற்று எரிசக்தி வளங்களை அது நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்