சிட்னி: உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் ஆக அதிக விகிதத்தில் மக்கள் சூரிய மின்சக்தித் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
அந்நாட்டில் சுமார் 3.3 மில்லியன் வீடுகளில் சூரிய சக்தித் தகடுகள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் எட்டு விழுக்காடு சூரிய மின்சக்தித் தகடுகளால் உருவாக்கப்படுகிறது.
இப்படி இருக்கையில் அந்நாட்டில் முதன்முறையாக அடுக்குமாடி வீடுகளில் வசிப்போருக்காகவும் சூரிய மின்சக்தித் தகடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘ஹேஸ்டேக்ஸ் சோலார் கார்டன்’ என்ற பெயரைக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் அடுக்குமாடி வீடுகளில் வசிப்போரும் சூரிய சக்தியால் உருவாக்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்.
திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் சூரிய மின்சக்தித் தோட்டங்களின் வாயிலாக இது சாத்தியமாகிறது.


