மணிலா: முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேமீது அந்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திரு டுட்டர்டேயால் தமது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று திருவாட்டி பிரான்சே கேஸ்டிரோ அக்டோபர் மாதம் நடைபெற்ற தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார். திரு டுட்டர்டே தம்மைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்தார் என்று அவர் தெரிவித்தார்.
78 வயது திரு டுட்டர்டே 2022ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை ஆறு ஆண்டு காலத்துக்கு பிலிப்பீன்ஸ் அதிபராகப் பதவி வகித்தார். தமது பதவிக் காலத்தில் அவர் சர்ச்சைக்குரிய அச்சுறுத்தும் வகையிலான பல கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

