பெர்லின்: ஜெர்மன் வடக்குக் கடலில் இருக்கும் ஹெலிகோலேண்ட் தீவுக்கு அருகில் இரண்டு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.
விபத்துக்குள்ளான கப்பல்களில் ஒன்று கடலில் மூழ்கியது.
இதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்த பலரைக் காணவில்லை என்று ஜெர்மனியின் கடல்துறை அவசரநிலை மத்திய தளபத்தியம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.
கடலில் விழுந்த ஒருவர் காப்பாற்றப்பட்டார் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்னொரு கப்பலில் 22 பயணிகள் இருப்பதாகவும் அந்தக் கப்பல் இன்னும் மூழ்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.