புக்கெட் ஹோட்டலுக்கு காப்புறுதி திட்டப்படி பணப் பட்டுவாடா செய்ய உத்தரவு

புக்கெட் ஹோட்டலுக்கு காப்புறுதி திட்டப்படி பணப் பட்டுவாடா செய்ய உத்தரவு

1 mins read
d00e7c40-1013-4fd4-9077-8ff44f1f6680
லெ மெரிடியன் புக்கெட் பீச் ரிசோர்ட் ஹோட்டல் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

தாய்லாந்தின் புக்கெட் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்று கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் தனது வழக்கமான வர்த்தகத்தை இழந்தது.

இதன் தொடர்பில் தனது இரண்டு காப்புறுதித் திட்டங்களின்கீழ் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி அந்த இரண்டு காப்புறுதி நிறுவனங்கள் மீது அது வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தற்பொழுது சிங்கப்பூர் நீதிமன்றம் அந்த ஹோட்டலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

அந்த இரு காப்புறுதி நிறுவனங்கள் கியூபிஇ இன்ஷுரன்ஸ் (சிங்கப்பூர்), எம்எஸ் ஃபர்ஸ்ட் கேப்பிட்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனம் ஆகும்.

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து புக்கெட்டில் உள்ள லெ மெரிடியன் ஹோட்டல் இரு காப்புறுதித் திட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்தக் காப்புறுதித் திட்டங்களின்படி, மனித நோய்ப் பரவல் அல்லது கொள்ளைநோய் ஹோட்டலின் ஒரு பகுதியோ இல்லை முழுமையாகவோ மூடப்படும் சாத்தியத்திற்கு எதிராக காப்புறுதித் திட்டம் பெறப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்