கோக்ஸ் பசார்: பங்ளாதேஷை உலுக்கிய ஹமூன் சூறாவளியால் இருவர் மாண்டனர். குறைந்தது பத்து பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 275,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்தனர்.
சூறாவளியின் காரணமாக மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டன. அத்துடன் கடலோர கிராமங்கள், தீவுகளில் கனமழை பெய்தது. ஆனால் பெருமளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று பங்ளாதேஷ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

