தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகொரியா: இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலைக்கு அமெரிக்கா உடந்தை

1 mins read
6f799887-628e-4484-a366-615daaf33d57
காஸா மருத்துவமனை தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டனர். அந்தத் தாக்குதலுக்கு தான் பொறுப்பு அல்ல என்று இஸ்ரேல் மறுத்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: மத்திய கிழக்கில் காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றின் மீது அக்டோபர் 17ஆம் தேதி இஸ்ரேல் குண்டு போட்டு தாக்கியது. இதன் மூலம் இஸ்ரேல் போர் குற்றம் செய்துள்ளது.

இஸ்ரேலின் அந்தச் செயலுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு கொடுத்தது என்று வடகொரியாவின் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை புகார் தெரிவித்தது.

“விமானந்தாங்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பெரும் படைபலத்தை மத்திய கிழக்கில் அமெரிக்கா குவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் ராணுவ ஆதரவையும் வழங்குகிறது.

“கொஞ்சம்கூட கவலையின்றி அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்ய அமெரிக்கா பச்சைக்கொடி காட்டி இருக்கிறது என்று ராணுவப் பேச்சாளர் கூறியதாக அரசாங்க கேசிஎன்ஏ செய்தி ஊடகம் தெரிவித்தது.

“இவற்றை வைத்துப் பார்க்கையில் இஸ்ரேல் அரங்கேற்றும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது என்பது தெரியவருகிறது,” என்று அந்தப் பேச்சாளர் அமெரிக்காவை சாடினார்.

இப்படி புகார் கூறிய வடகொரிய அமைச்சு, அதற்கான ஆதாரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்