ஆக இளைய விண்வெளி வீரர்களை ஆய்வு நிலையத்திற்கு சீனா அனுப்பியது

ஆக இளைய விண்வெளி வீரர்களை ஆய்வு நிலையத்திற்கு சீனா அனுப்பியது

1 mins read
800cb998-646c-4ceb-a00e-8622dd0d5270
இடமிருந்து டாங் ஹோங்போ, டாங் ஷின்ஜி, ஜியாங் ஸின்லின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் லாங் மார்ச்-2எஃப் என்ற உந்துகலனில் மேலே புறப்பட்டுச் சென்றதற்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். - படம்: ராய்ட்டர்ஸ் 

பெய்ஜிங்: சீனா ஆக இளைய விண்வெளி வீரர்களை வியாழக்கிழமை தனது ஆகாய ஆய்வு நிலையத்திற்கு அனுப்பியது.

எதிர்காலத்தில் தன்னுடைய விண்வெளிக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் புதிய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு முயற்சியாக சீனா ஆக இளைய வீரர்களை அனுப்பி வைத்து இருக்கிறது.

ஷென்ஷூ-17 அல்லது சொர்க்க கலன் என்று குறிப்பிடப்படும் விண்கலன் மூன்று வீரர்களை ஏற்றிக்கொண்டு மேலே கிளம்பியது.

அந்த விண்கலத்தைச் சுமந்து கொண்டு லாங் மார்ச்-2எஃப் என்ற உந்துகளம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுசுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து மேலே புறப்பட்டுச் சென்றது.

அந்த வீரர்கள் ஆறு மாத காலம் சீனாவின் ஆய்வு நிலையத்தில் தங்கி இருந்து பணியாற்றுவார்கள்.

அந்த வீரர்களுக்கு முன்னாள் விமானப் படை விமானி டாங் ஹோங்போ, 48, தலைமை ஏற்று இருக்கிறார்.

அவருடன் செல்லும் டாங் ஷின்ஜி என்பவருக்கு வயது 33. டாங் ஷின்ஜியும் மற்றொருவரான ஜியாங் ஸின்லின், 35 என்பவரும் முதல் முறையாக இப்போது விண்வெளிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்