ஹிஜாப் விதிமுறை மீறல்:ஈரானியப் பெண் மரணம்

1 mins read
98ce13b0-61ff-421c-b43b-93b2e7a50a68
தெஹ்ரானின் சென்ட்ரல் ஸ்குவேர் கடைத்தொகுதியில் ஹிஜாப்புடன் பெண்கள். - படம் ஏஃப்பி

தெஹ்ரான்: மெட்ரோ ரயிலில் நடந்த தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து கோமா நிலையில் இருந்த 16 வயதான ஈரானிய இளையர் அர்மிதா காராவாண்ட், சனிக்கிழமையன்று (அக்.28) மரணம் அடைந்தார். 28 நாட்கள் தீவிர சிகிச்சை செய்தும் பலனின்றி அப்பெண் இறந்துவிட்டார் என்று, ஈரானியக் குடியரசின் இளையர் அமைச்சைச் சார்ந்த பொர்னா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் அதிகார அமைப்புகள் அவரை மற்ற பயணிகள் தாக்கவில்லை என்றும் ரத்த அழுத்தக் குறைவால் ரயிலில் மயங்கி விழுந்தார் எனவும் கூறியிருந்தனர்.

குர்திய இனத்தவரான அர்மிதா, ‘ஹிஜாப்’ எனப்படும் பெண்கள் அணியும் தலையங்கி விதிமுறையை மீறியதால் ஈரானின் அறநெறிப் பிரிவின் அதிகாரிகளால் தாக்கப்பட்டார் என்று குர்திய வலதுசாரி அமைப்பான ஹெங்கா கடந்த அக்.3 அன்று செய்தி ஒன்றில் அறிவித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 22 வயது மாஹ்சா அமினி என்ற பெண், இதேபோன்று ஹிஜாப் விதிமீறல் குற்றத்துக்குப் பிறகு தடுத்துவைக்கப்பட்டிருந்து கோமா நிலையில் மரணம் அடைந்தார். அந்நிகழ்வுக்குப் பிறகு ஈரானில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

குறிப்புச் சொற்கள்