சுரங்கத் தீயில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சுரங்கத் தீயில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
38164d6c-556f-4625-b834-42a4f72d94b2
மாண்டோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. - படம்: தமிழ் முரசு

அஸ்தானா: கசக்ஸ்தானில் உள்ள சுரங்கம் ஒன்றில் தீ மூண்டதை அடுத்து பலர் மாண்டனர். மாண்டோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாயமான எட்டு சுரங்கப் பணித் தொழிலாளர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாக கசக்ஸ்தானின் அவசரகால மீட்புத் துறை தெரிவித்தது.

எரிவாயு கசிவு காரணமாக சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

அங்கிருந்து 206 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயு கசிவு நிலவரம் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்