தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அருகருகே சல்மான் கான், ரொனால்டோ!

1 mins read
f2cbd3d4-e1c6-4f6e-ab4f-3d90a5cea527
‘யாரும் எதிர்பாராத சந்திப்பு’ என இணையவாசிகள் கருத்து - படம்: சமூக ஊடகம்

ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அருகில் அமர்ந்து குத்துச்சண்டை போட்டியைக் காண்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

ரொனால்டோவும் அவருடைய வாழ்க்கைத் துணை ஜியார்ஜினா ரோட்ரிகேசும் சல்மான் கானும் ஒரே வரிசையில் அமர்ந்திருப்பதையும் குத்துச்சண்டையை அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்ப்பதையும் காண முடிகிறது.

ரொனால்டோவும் ஜியார்ஜினாவும் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் சல்மான் கான் குத்துச்சண்டையைப் பார்ப்பதில் கவனம் செலுத்துவதையும் மற்றொரு படம் காட்டியது.

சமூக ஊடகத்தில் வலம்வரும் படங்கள் குறித்து கருத்துகளைப் பதிவு செய்துவரும் இணையவாசிகள், “யாரும் எதிர்பாராத சந்திப்பு” என்று குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்