பெட்டாலிங் ஜெயா: கோழி வாங்குவதற்கான உதவித் தொகையையும் கோழி விலைகள் மீதான கட்டுப்பாடுகளையும் மலேசியாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தளர்த்தப்போவதாக மலேசியா அறிவித்துள்ளது. தற்போதைய கோழி விநியோகத்தின் அடிப்படையிலும் விலைகள் நிலைப்பட்டிருப்பதாலும் உதவி மானியம் புதன்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக மலேசியாவின் வேளாண், உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமது சபு தெரிவித்துள்ளார். மொத்தமாக கோழிகளை வாங்கும்போது அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை வெளிநாட்டினரும் அதிக சம்பளம் ஈட்டுவோரும்கூட அனுபவித்ததாகவும் உதவிகள் நிறுத்தப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் திங்கட்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது ஒரு கிலோ கோழிக்கான கட்டுப்படுத்தப்பட்ட விலை 9.40 ரிங்கிட் (S$2.70). உதவி நிறுத்தப்படுவதை அறிந்து பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு கோழிகளை வாங்கினால், தேவை அதிகரித்து விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் சொன்னார்.
கோழி வாங்குவதற்கான நிதி உதவியை நிறுத்துகிறது மலேசியா
1 mins read
தற்போது ஒரு கிலோ கோழிக்கான கட்டுப்படுத்தப்பட்ட விலை 9.40 ரிங்கிட் (S$2.70). - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்

