சர்ச்சையை ஏற்படுத்திய மலேசிய எதிர்க்கட்சி உறுப்பினரின் பேச்சு

1 mins read
c220a064-a6a2-458c-9a5f-5447351d3b01
லங்காவி தொகுதி உறுப்பினர் முகமது சுஹைமி அப்துல்லா (இடது), பக்கத்தான் ஹரப்பான் பெண் உறுப்பினரான தெரசா கோக். - படம்: ஊடகம்

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பெண் உறுப்பினரைப் பார்த்து பேசிய வார்த்தைகள் தற்போது சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளன.

கடந்த வாரம் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது லங்காவி தொகுதி உறுப்பினரான முகமது சுஹைமி அப்துல்லாவிடம் பக்கத்தான் ஹரப்பான் பெண் உறுப்பினரான தெரசா கோக் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

லங்காவி சுற்றுலாத்தலத்திற்கு அரைக்கால் சட்டையுடன் செல்ல அனுமதி உண்டா என்று அவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு சுஹைமி, “சிப்புதே உறுப்பினரை லாங்காவிக்கு வரவேற்கிறேன். நீங்கள் எதுவும் அணியாமல் வந்தால் மிகவும் ஏற்கக்கூடியதாக இருக்கும்,” என்றார்.

திருவாட்டி கோக், கோலாலம்பூரின் சிப்புதே தொகுதியைப் பிரதிநிதிக்கிறார்.

திரு சுஹைமியின் பதிலால் அதிர்ச்சி அடைந்த அவர், “கெட்ட சிந்தனை கொண்டவர் நீங்கள்,” என்று உடனடியாகக் கூறி தமது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

திரு சுஹைமி தெரிவித்த கருத்துகள் மலேசியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறிய வார்த்தைகள் தற்போது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்