மலேசியாவில் 913 பதின்ம வயதினருக்கு பால்வினை நோய்

மலேசியாவில் 913 பதின்ம வயதினருக்கு பால்வினை நோய்

படம்: தமிழ் முரசு

30 Oct 2023 - 9:23 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 913 பதின்மவயதினர் முறையற்ற பாலியல் உறவுகள் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் ஃபாத்லினா சித்திக் தெரிவித்துள்ளார்.

மலேசிய சுகாதார அமைச்சு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் இந்த விவரத்தை வெளியிட்டார். இந்த நோய்களில் எய்ட்ஸ் நோயும் அடங்கும் என்றார் அவர்.

2018ஆம் ஆண்டில் 13க்கும் 17க்கும் இடைப்பட்ட 255 மாணவர்கள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டனர். 2019ல் 225, 2020ல் 191, 2021ல் 96 மற்றும் 2022ல் 146 பால்வினை நோய்ச் சம்பவங்களால் பதின்ம வயதினர் பாதிக்கப்பட்டதாக திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாபாலியல்சுகாதாரம்மருத்துவம்