தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏபெக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்துபின்னர் முடிவு செய்யப்படும்: அன்வார்

1 mins read
51079831-ae68-4353-81aa-9e5a5fd0437e
ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து விளக்கிய மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா இணையம்

கோலாலம்பூர்: ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் (ஏபெக்) உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாடு டிசம்பரில் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெறுகிறது.

ஆனால் இதில் மலேசியா பங்கேற்குமா என்பது தெரியவில்லை.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், ஏபெக் மாநாட்டில் பங்கேற்பது குறித்து வட்டாரத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

“ஆசியான், சீனாவுடன் தொடர்புகொண்டு அவர்களது நிலைப்பாட்டை அறிந்து வருகிறோம். எங்களுடைய நட்பு நாடுகளின் நிலைப்பாட்டின்படி முடிவு செய்வோம்.” என்று அவர் கூறினார்.

பிரதமர் கேள்வி அங்கத்தில் வான் அஹமட் ஃபைஷால் கேட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

“பாலஸ்தீனத்துடன் உள்ள நமது ஒற்றுமையைக் காட்டுவதற்காக ஏபெக் மாநாடு புறக்கணிக்கப்படுமா,” என்று வான் அஹமட் ஃபைஷால் கேட்டிருந்தார்.

பாலஸ்தீனம்-இஸ்ரேல் பூசலில் மலேசியாவின் நிலைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.

“அமெரிக்காவுக்கான மலேசியத் தூதரை அழைத்து இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தில் நமது நிலையைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளனர். நமது தூதர் நம்முடைய நிலையை அவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்,” என்றார் அவர்.

இது, மலேசியா ஹமாஸுக்கு கண்டனம் தெரிவிக்காததால் நடந்துள்ளது என்று திரு அன்வார் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்