டென்வர்: சட்ட வழக்கு ஒன்றில் US$23,500 (S$32,135) மதிப்பில் கட்டுக்கட்டாக சில்லறைக் காசை செலுத்த பிரதிவாதி ஒருவர் முற்பட்டார். ஆனால், அது சரியான கட்டண முறையன்று எனக் கூறி அமெரிக்காவில் கொலொராடோ நீதிபதி கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அந்தக் காசுகளின் மொத்த எடை 2,900 கிலோகிராமுக்கு மேல் இருக்கும்.
தவறான எண்ணத்தில் அவ்வளவு காசை செலுத்த முயன்ற அந்த வெல்டிங் நிறுவனம், அச்செயலுக்காக கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
அந்த வெல்டிங் நிறுவனமும் அதன்மீது வழக்கு தொடுத்த மற்றொரு நிறுவனமும் சமரசம் மூலம் சச்சரவைத் தீர்த்துக்கொள்ள இணங்கின. ஆனால், கட்டணம் செலுத்தும் முறை குறித்து அந்த உடன்பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

