இரண்டு ஆண்டுகளாக பாறையில் சிக்கித் தவிக்கும் செம்மறியாடு

பிரிட்டன்: ஸ்காட்லாந்தின் மலைப் பாறை ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு செம்மறியாடு சிக்கித் தவிக்கிறது. அதை அறிந்த விலங்குப் பிரியர்கள் பலர் அதைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் குரல் கொடுத்துள்ளனர்.

பிலான்டோரிலிருந்து நிக் பகுதிக்கு கயாக் படகுக் குழுவுடன் சென்றிருந்த திருவாட்டி ஜில்லியன் டர்னர், 2021ஆம் ஆண்டில் அந்த ஆட்டை முதன்முதலாகப் பார்த்தார்.

ஈராண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அதே பகுதிக்கு அவர் சென்றிருந்தபோது, அதே ஆட்டை அந்தப் பாறையில் பார்த்து மனம் வெதும்பினார். இப்போது அதன் உடலில் தடிமனான, நீளமான கம்பளி தென்பட்டது.

பிரிட்டிஷ் செய்தித்தாள்கள் அந்த ஆட்டை, பிரிட்டனின் தனிமையான ஆடு என்று வர்ணித்துள்ளன.

“நாங்கள் முதன் முதலாக அந்த ஆட்டைப் பார்த்ததும் அது உற்சாகமடைந்தது. நாங்கள் படகில் சென்றுகொண்டிருக்கும்போது, அது பாறை ஓரத்தில் எங்களைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்தது. மேலும் தொடர்ந்து செல்லமுடியாத போது, ஏமாற்றத்துடன் ஆடு திரும்பிச் சென்றது,” என்று திருமதி டர்னர் நார்தன் டைம்ஸ் எனும் ஸ்காட்லாந்தின் செய்தித்தாளிடம் அக்டோபர் 24ஆம் தேதி தெரிவித்தார்.

“அது எப்படியிருந்தாலும் பாறையிலிருந்து இறங்கி, தரைக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பாறையில் அதைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியுற்றேன். மனம் நொந்த நிலையில், நானும் விலங்கு ஆர்வலர் குழுக்கள் சிலவற்றைத் தொடர்புகொண்டு அந்த ஆட்டை மீட்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை,” என்று அவர் மேலும் சோகத்துடன் கூறினார்.

இது பற்றி கருத்துரைத்த ஸ்காட்டிஷ் விலங்கு வதை தடுப்புச் சங்கத்தின் தலைமை கண்காணிப்பாளர் மைக் ஃபிலின், தங்கள் அமைப்பு தனிமையில் உள்ள ஆட்டைப் பற்றி அறிந்திருப்பதாகக் கூறினார்.

செம்மறியாட்டைக் காப்பாற்ற விலங்குப் பிரியர்கள் சிலர் Change.org இணையத் தளத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!