இந்தோனீசியா: 200,000 ஹெக்டர் செம்பனை தோட்டங்கள் வனப்பகுதியாக மாறும்

1 mins read
a38f72b4-eb94-4a1d-90ca-f459e2bc3039
இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் உள்ள செம்பனை தோட்டம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: வனப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட 200,000 ஹெக்டர் பரப்பளவு உள்ள செம்பனைத் தோட்டப் பகுதிகள் வனப்பகுதியாக மீண்டும் மாற்றம் காண அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை இந்தோனீசிய அரசு அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.

உலகில் ஆகப் பெரிய செம்பனை எண்ணெய்த் தயாரிப்பு நாடாகவும் ஏற்றுமதி நாடாகவும் இந்தோனீசியா விளங்குகிறது.

அந்நாடு வனப்பகுதிகளில் இயங்கும் செம்பனைத் தோட்டங்கள் சட்டப்படி இயங்குகின்றனவா என்பதைக் கண்டறிய 2020ஆம் ஆண்டு விதிமுறைகளை வகுத்தது. இது வனப்பகுதிகளில் உள்ள செம்பனைத் தோட்டங்களை நாட்டின் ஆளுகையின்கீழ் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சி.

இந்தோனீசியாவின் பசுமை இயக்கங்கள் வனப்பகுதி ஆக்கிரமிப்பை அரசாங்கம் மன்னித்துவிட்டு விடுவதாக குற்றம்சாட்டி வரும் வேளையில், பல நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்த நிலப்பகுதியை பயன்படுத்திவரும் நிலையில், இந்த விதிமுறைகள் அவசியமாகின்றன என்று அதிகாரிகள் விளக்கினர்.

குறிப்புச் சொற்கள்