மாடுகளின் மணியோசை:சுவிஸ் கிராமவாசிகள் இயக்கம்

1 mins read
d94b5702-e12e-4a43-b0d4-e36e04315828
மாடுகளின் மணியோசை சுவிஸ் பாரம்பரிய கலாசாரம் - படம்: பெக்சல்ஸ்

சுவிட்சர்லாந்து: புதிதாக “ஆர்வங்கன்” கிராமத்தில் குடியேறிய 2 குடும்பங்கள் மாட்டின் மீது கட்டப்பட்டுள்ள மணிகளின் தொடர் ஓசையால் பாதிக்கப்படுவதாகக் கிராம சபையிடம் புகார் அளித்தனர்.

அதனைக் கேள்விப்பட்டு வெகுண்டெழுந்த கிராமவாசிகள், பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் சுவிஸ் நாட்டுக் கலாசாரப் பாரம்பரியத்தைக் காக்கவும், கிராம தேவாலய மணியோசையைத் தொடரவும் மணியோசை இயக்கத்தைத் தொடங்கினர்.

பொது இரைச்சல் கட்டுப்பாட்டை கவனத்தில்கொண்டு, கிராமவாசிகள் மாடுகளின் மீது கட்டப்படும் மணிகளின் ஓசையையும் தேவாலய மணி அடிக்கப்படுவதையும் எவ்வாறு தொடரலாம் என்பதைப் பற்றிய பரிந்துரையை கிராம சபையிடம் டிசம்பர் மாதத்தில் முன்வைக்கவேண்டும். இந்த முடிவுகள் எடுக்கப்படும் முன்பே, புகார் அளித்த ஒரு குடும்பம் அதனைத் திரும்பப் பெற்றுவிட்டது. மற்றொரு குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்