விஷக் காளான் விருந்து: ஆஸ்திரேலியாவில் மூவர் மரணம்

விஷக் காளான் விருந்து: ஆஸ்திரேலியாவில் மூவர் மரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

03 Nov 2023 - 8:27 pm

1 mins read

சிட்னி: மதிய உணவில் பரிமாறப்பட்ட காளான்களில் விஷம் இருந்ததால், அதனை உட்கொண்ட 3 முதியவர்கள் மரணம் அடைந்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள சிறு கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மாதின் முன்னாள் மாமனார், மாமியார், மாமியாரின் சகோதரி ஆகியோர் இறந்தவர்களாவர். அம்மாதின் முன்னாள் கணவரும் விருந்தில் உணவருந்தியுள்ளார். ஆனால் உயிர் தப்பிவிட்டார் . அவரை ஏற்கனவே 2021, 2022ல் அதே மாது 3 தனிப்பட்ட சம்பவங்களில் கொலை செய்ய முயற்சி செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விருந்தில் கலந்துகொண்ட ஐந்தாவது நபர் மாதின் தற்போதைய கணவர். அவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
கொலை