பெர்லின்: ஜெர்மனியில் உள்ள ஹேம்பர்க் விமான நிலையம் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை 35 வயது ஆடவர் ஒருவர் நான்கு வயது குழந்தையுடன் காரில் விமான நிலையத் திடலுக்குள் புகுந்தார்.
ஒரு விமானத்தின் கீழ் அந்தக் கார் நிற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தற்போது அந்த விமான நிலையத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையத்தை சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

