தோக்கியோ: காட்டு மானை படம் பிடித்துக்கொண்டிருந்த பெண் 40 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்ததில் மரணமடைந்தார்.
இச்சம்பவம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் நிகழ்ந்ததாக யாஹு ஜப்பான் செய்தி வெளியிட்டுள்ளது.
காட்டு மான்கள் தங்கள் இயற்கை வாழ்விடங்களில் சுற்றித் திரிவதைப் பார்க்க அந்த இருபது வயதுப் பெண் தனது தந்தை, அவரது நண்பர்களுடன் மலைகளுக்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவரும் இருந்த வாகனத்திலிருந்து இறங்கி, தனது தொலைபேசியைப் பயன்படுத்தி மானையும் மற்ற விலங்குகளையும் படம்பிடிப்பதற்காக பாலத்திற்குச் சென்றாள். ஆனால், அவள் கால் தவறி பாலத்தில் இருந்து விழுந்தாள்.
அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாக காவல்துறையினரை அழைத்தார்.
அவர் பாலத்திலிருந்து 40 அடி பள்ளத்தில் விழுந்து விட்டதாக ஷிமோடா காவல் நிலையம் கூறியது. அங்கு அவர் ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விசாரணைகள் நடந்து வருகின்றன.