தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் வறுமையை ஒழிக்க மலேசியா திட்டம்; வருவாய் ஈட்ட முடியதோருக்கு மாதாந்திர உதவி

1 mins read
36ab7fad-591f-46b4-936f-2a52881b9a43
மலேசியா வறுமையை ஒழிக்க முயற்சி எடுத்து வருகிறது. பெரிய அளவிலான முயற்சிகளும் உதவிகளும் வழங்கப்படாவிட்டால் வறுமையின் சுழல் பிடியில் இருந்து அடுத்த தலைமுறையினர் மீள்வது சிரமம் எனக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: வயது அல்லது உடல் நலம் காரணமாக வருவாய் ஈட்ட முடியாத குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை நடந்த தேசிய பொருளியல் நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்தில் மலேசியாவில் வறுமையை ஒழிக்க பரிந்துரைக்கப்பட்ட மூன்று திட்டங்களில் இதுவும் ஒன்று.

உணவு, வறுமைக் கோட்டிற்கு கீழ் வருமானம் ஈட்டக்கூடிய உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படும்.

இதுகுறித்த தரவுகளை அனைத்து நிறுவனங்களும் அமைச்சுகளும் மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் என்றார் அன்வார்.

மேலும் மாதாந்திர பண உதவி, வீட்டை மேம்படுத்துதல், தொழில் மூலதனம் வழங்குதல், திறன் பயிற்சி, வருமானம் ஈட்டுதல் போன்ற திட்டங்கள் உட்பட கடுமையான வறுமையை ஒழிக்க அரசாங்கத்தால் பல முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மூன்று மாதங்களில் இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான குடும்பத்தினர்களை அனைத்து நிறுவனங்களும் அடையாளம் கண்டு பொருத்தமான திட்டத்தில் அவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்