தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டையான தலைமுடி வைத்திருந்த மாதைத் தாக்கிய ஆடவர் கைது

1 mins read
9d72ae83-c655-4519-b45c-b4f2c83b19a7
20 வயதுகளில் இருக்கும் அந்த ஆடவர் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் கூறினர். - கோப்புப் படம்: தமிழ் முரசு

தென்கொரியாவின் கியோன்சாங் மாநிலத்தில் கட்டையான தலைமுடி தரித்த அக்கம்பக்கக் கடை ஊழியரான மாது ஒருவரைத் தாக்கிய 20 வயதுகளில் மதிக்கத்தக்க ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

“நீங்கள் கட்டையான தலைமுடி கொண்டிருப்பதால் நீங்கள் பெண் ஆர்வலராக இருக்க வேண்டும். நான் ஓர் ஆணாதிக்கவாதி, பெண் ஆர்வலர்கள் தாக்கப்பட வேண்டும் என்று நினைப்பவன் நான்,” என்று அந்த ஆடவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த அக்கம்பக்கக் கடை ஊழியரான மாதுவும் 20 வயதுகளில் மதிக்கத்தக்கவர். அவரை ஆடவர் குத்தியும், காலால் உதைத்தும் தாக்கியுள்ளார். இதனால் அந்த மாதுக்கு தசைநார் காயங்கள், காதில் காயம் ஆகியவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மாதுக்கு உதவி புரிய வந்த 50 வயதுகளில் மதிக்கத்தக்க வாடிக்கையாளர் ஒருவரையும் ஆடவர் நாற்காலி ஒன்றைக் கொண்டு தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வாடிக்கையாளருக்கு தோள்பட்டை, மூக்கு, நெற்றி ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மதுபோதையில் இருந்த ஆடவர் தான் கைது செய்யப்படும்போதும் தாக்குதலைத் தொடர்ந்ததாக காவல்துறையினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்