ஆஸ்திரேலியாவை அக்டோபரில் வாட்டிய வறண்ட பருவநிலை

ஆஸ்திரேலியாவை அக்டோபரில் வாட்டிய வறண்ட பருவநிலை

2 mins read
0ded37fe-8414-4088-8fbc-a3400dff0ffc
வறண்ட பருவநிலை ஆஸ்திரேலியாவின் கோதுமை உற்பத்தியை பாதித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு வறண்ட பருவநிலை அக்டோபரில் பதிவாகியிருக்கிறது.

எல் நினோ காலநிலை மாற்றம் ஆஸ்திரேலியாவையும் விட்டுவைக்கவில்லை. அக்டோபரில் வாட்டி வதக்கியிருக்கிறது.

இது, உலகின் ஆகப்பெரிய கோதுமை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் பயிர் விளைச்சலை பாதித்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய வானிலை நிலையம் புதன்கிழமை தெரிவித்தது.

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு நிலையம், தனது வழக்கமான பருவநிலை அறிக்கையில் 2022க்குப் பிறகு அக்டோபர் மாதம் மிகவும் வறண்ட மாதமாக இருக்கும் என்று கடந்த மாதம் தெரிவித்தது. சராசரியைவிட மழை 65% குறைவாக இருக்கும் என்று அது கூறியிருந்தது.

இந்த நிலையில் அக்டோபரில் விக்டோரியா மாநிலத்தை தவிர அனைத்துப் பகுதிகளும் வறண்ட பருவநிலையில் வாடியது.

உலகில் மிகப்பெரிய தானிய உற்பத்தி மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியா மாநிலமும் அக்டோபரில் வறண்டிருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக போதும் போதும் என்ற அளவுக்கு மழை பெய்தது. அதன் பிறகு எல் நினோவின் தாக்கம் அதிகரித்தது.

அதன் தொடக்கமாக செப்டம்பரில் வறண்ட பருவநிலை புதிய உச்சத்தைத் தொட்டது.

அக்டோபர் முற்பகுதியில் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ததால் பயிர் விளைச்சல் மோசமாகாமல் இருந்தது. இருந்தாலும் நாட்டின் கோதுமை அறுவடை இவ்வாண்டு சுமார் 35% குறைந்து 26 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு மேற்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு குவீன்ஸ்லாந்து, வடக்கு வட்டாரத்தில் உள்ள மேற்பகுதி மற்றும் வடக்கு குவீன்ஸ்லாந்து வரை மழை குறைவாக இருந்தது. தெற்கு விக்டோரியாவிலும் கிழக்கு டாஸ்மேனியாவிலும் அவ்வளவு மழையில்லை.

இதற்கிடையே ஜனவரி வரையில் வடக்கு, மேற்கு, தெற்கு ஆஸ்திரேலியா வரை மழை சராசரிக்கும் குறைவாக இருக்கும் என்று நீண்டகால வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்