ஜெருசலம்: உலகளாவிய விமானப் பயணத்தில் மத்தியக் கிழக்குப் பகுதி மிகவும் முக்கியமானது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றை இணைக்கும் வட்டாரமான மத்திய கிழக்கின் வான் எல்லைகளை அன்றாடும் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான விமானங்கள் சேவை வழங்குகின்றன.
தற்போது நடந்துவரும் போரினால் பல விமானங்கள் மாற்றுப் பாதைகளை நாடவேண்டியுள்ளதால் விமானப் பயணங்கள் நீண்டுவிட்டன. போர் நடக்கும் பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பாகச் செல்ல வேண்டியிருப்பதால், விமானங்கள் மாற்றி வழிகளில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன. ஏற்கெனவே ரஷ்யா உக்ரேனில் நடத்தும் போரினால் அனைத்துலக வழித்தடங்களைப் பயன்படுத்தும் விமானங்கள் நெடுந்தூரப் பயணங்களை மேற்கொண்டு பாதிப்படைந்துள்ளன. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் வாசல்போன்று உள்ள (பெருவட்டம் என்று அழைக்கப்படும்) சைபீரிய வான் எல்லையைத் தாண்டி விமானங்கள் பயணிக்க நேரிட்டுள்ளது.
பாதுகாப்பை முன்னிறுத்தி, இஸ்ரேலிய தேசிய விமானம் (எல்அல்) அரேபிய தீபகற்பத்தில் அதிகமாகப் பயணிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டது.
இந்தியாவுக்கும் ஜப்பானிய தலைநகர் தோக்கியோவுக்கும் செல்லக்கூடிய தனது விமானச் சேவைகளை இஸ்ரேல், முறையே தள்ளிவைத்தும் நிறுத்திவைத்தும் உள்ளது. பல விமானச் சேவைகள் இஸ்ரேலிய தலைநகருக்கு தங்களின் சேவைகளை நிறுத்தியுள்ளன.
லெபனானின் பெய்ரூட் நகருக்கு ஜெர்மனியின் லுப்தான்சா, விமானச் சேவையை நிறுத்திவைத்துள்ளது. பிரான்சும் நெதர்லாந்தும் இணைந்து நிர்வகிக்கும் ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் சேவை, மத்திய கிழக்கின் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
போர் நடக்கும் பல பகுதிகளில் சேவையைத் தொடரும் விமானச் சேவைகளில் பயணம் செய்வோருக்கு பலதரப்பட்ட பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.
பயண ஆய்வு நிறுவனமான ஃபார்வர்ட்கீஸ், இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு உலகில் 5 விழுக்காடு அனைத்துலக விமானப் பயணங்கள் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஏமன், சிரியா, சூடான் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நடக்கும் உள்நாட்டுப் போர்கள், அங்குள்ள வான் எல்லைகளை விமானங்கள் தவிர்க்கும் பகுதிகளாக அமைத்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் விமானங்கள், ஈரானைத் தவிர்த்து, மேற்குத் திசையை நோக்கியுள்ள ஈராக்கைப் பயன்படுத்திவருகின்றன. அதுவும் பயண நேரத்தைக் கூட்டியுள்ளது.