பிரபோவோவின் முன்னிலை அதிகரிப்பு

பிரபோவோவின் முன்னிலை அதிகரிப்பு

1 mins read
342ed86e-35b5-46a7-b051-73d0b5b51634
இந்தோனீசிய அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் தேர்தலில் போட்டியிடும் பிரபோவோ சுபியாந்தோவின் முன்னிலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனை அவர் தேர்ந்தெடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியும், திரு பிரபோவோவின் நிலை வலுவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் திரு பிரபோவோவுக்கு வாக்களிக்கப்போவதாக கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தவர்களில் 39.7 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியின் ஆதரவுடன் களமிறங்கும் திரு கஞ்சர் பிரனோவோவுக்கு வாக்களிக்கப்போவதாக 30 விழுக்காட்டினர் கூறினர்.

இந்தக் கருத்துக் கணிப்பு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 1ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 1,220 பேர் பங்கெடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்