டமாஸ்கஸ்: சிரியா மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் குறிவைத்து அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடதப்பட்ட தாக்குதல்களுக்கு அவை பதிலடியாக அமைந்தன.
எதிரிகளின் பயிற்சி முகாமையும் தளத்தையும் தகர்த்தியதாக அமெரிக்கா கூறியது.
அந்த வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களில் ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள அமெரிக்கப் படைகளையும் அதன் கூட்டணிப் படைகளையும் ஈரான் ஆதரவு பெற்ற படைகள் குறைந்தது 40 முறை தாக்கின.
சிரியாவில் 900 அமெரிக்க ராணுவ வீரர்களும் ஈராக்கில் 2,500 அமெரிக்க வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தாவிடில் ஈரானுடம் தொடர்புடைய அமைப்புகளுக்கு எதிராக கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சூசகமாகத் தெவித்துள்ளது.