தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாய்களிடம் அன்பைப் பொழியும் விழா

1 mins read
5a008eff-da0f-4992-a928-2976a48e2b7b
நாய்க்கு பொட்டு வைத்து அழகு பார்க்கும் நேப்பாள இந்து சமயத்தினர். - படம்: நேப்பாள ஊடகம்

காத்மாண்டு: குகோர் திஹார் எனும் இந்து சமய விழா நேப்பாளத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடந்தது.

அந்த விழாவையொட்டி நாய்களிடம் அன்பு மழை பொழியப்பட்டது. நேப்பாள இந்து சமயத்தினரின் நம்பிக்கையின்படி நாய்கள் எமதர்மராஜனின் தூதர்கள்.

இதனால் இவ்விழாவில் நாய்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டும் குங்குமப் பொட்டு வைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்படுகிறது.

அத்துடன் மனிதர்களுக்கு உற்ற தோழனாக நாய்கள் இருப்பதால் இந்த விழாவின்போது அவை கௌரவிக்கப்படுகின்றன.

நேப்பாளக் காவல்துறையில் உள்ள நாய்கள் பிரிவில் இருக்கும் நாய்களும் இவ்விழாவின்போது கௌரவிக்கப்பட்டன.

இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது இந்த நாய்கள் தேடுதல் பணிகளில் ஈடுபடுகின்றன. அதுமட்டுமல்லாது மோப்ப சக்தியைப் பயன்படுத்தி வெடிபொருள்களையும் போதைப்பொருளையும் கண்டுபிடிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்