மலேசிய ரப்பர் தோட்டத்தில் புலி தாக்குதல்; இரண்டாவது ஆடவர் மரணம்

1 mins read
b6746a13-df5c-4cc4-a2cf-3f5085faf894
புலியைப் பிடிக்க கூண்டு அமைக்கப்படுகிறது. - படம்: மலேசிய ஊடகம்

குவா மூசாங்: கிளந்தான், குவா மூசாங்கில் மேலும் ஒருவர் புலியினால் தாக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து, புலியைப் பிடிக்க கிளந்தான் வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் துறை பொறிகளையும் கேமராக்களையும் அமைக்க உள்ளது.

சனிக்கிழமை பகல் 1.30 மணியளவில் தனது மனைவியுடன் ரப்பர் வெட்டிக்கொண்டிருந்த, ​​மியன்மார் நாட்டைச் சேர்ந்த அஹ்கா சோ யா, 22 புலி தாக்கியதால் படுகாயமடைந்தார். அவரது கழுத்தின் பின்பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியதாக குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபோ, ஞாயிற்றுக்கிழமை மலேசிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக திரு சிக் கூறினார்.

இரண்டு மாதங்களில் குவா மூசாங் மாவட்டத்தில் புலி தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இது இரண்டாவது சம்பவம்.

முன்னதாக இந்தோனீசிய ஊழியர் ஒருவரை புலி தாக்கியதை திரு சிக் உறுதிப்படுத்தினார்.

42 வயதான திரு லாலு சுகர்யா யாஹ்யாவின் கால்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் அவரது உடலின் பல்வேறு பாகங்கள் காணப்பட்டதாக அவர் கூறினார். அவற்றில் விலங்குகள் தாக்கியதற்கான அறிகுறிகள் காணப்பட்டன என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்