நேப்பாளத்தில் டிக்டாக் தடை செய்யப்படுவதாகஅதிகாரிகள் தகவல்

1 mins read
887ab977-c740-4712-8ca7-1a60331d8c6c
டிக்டாக் வெறுப்பு உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக நேப்பாளம் குற்றம்சாட்டியுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ருகும் வெஸ்ட்: நேப்பாள அரசாங்கம், அதன் மக்களிடையே பிரபலமான டிக்டாக் சமூக ஊடகச் செயலியை தடை செய்வதாக திங்கட்கிழமை அன்று தெரிவித்தது.

அந்த ஊடகம், வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்களை அகற்ற மறுப்பதாகவும் இதனால் நாட்டின் சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டின் அரசாங்கம் கூறியது.

உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இமய மலைச் சிகரத்தின் நாடான நேப்பாளின் 30 மில்லியன் மக்கள் தொகையை இத்தடையால் டிக்டாக் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் நிறுவனம் ஒன்று டிக்டாக்கை நடத்தி வருகிறது.

டிக்டாக் உட்பட டஜன் கணக்கான சீன செயலிகளுக்கு ஏற்கெனவே இந்தியா தடை விதித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினையால் இந்தியா, சீனாவின் செயலிகளுக்கு முன்னதாக தடை விதித்தது.

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலும் டிக்டாக்குக்கு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

அந்த ஊடகத்தில் இடம்பெறும் மிகவும் முக்கியமான தகவல்கள் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வதாக டிக்டாக்குக்கு எதிரான நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்