தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவானுக்கு தேவையில்லாத சந்தேகம்;2027ஆம் ஆண்டில் தனது நாட்டின் மீது படையெடுக்கும் ஆற்றல் சீனாவுக்கு இருக்காதாம்

2 mins read
c1033e21-93db-4707-a9e6-544d7dd58e7e
தைவானில் உள்ள காவோசியூங் கடற்படைத் தளத்தில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற திறந்தவெளி கண்காட்சியில் சிறுவன் ஒருவன் கடற்படை வீரர் போல உடையணிந்து பெருமையுடன் நிற்கிறான். 2027ஆம் ஆண்டுக்குள் சீனா தனது நாட்டின் மீது படையெடுக்க வாய்ப்பு இல்லை என்று தைவான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா மற்றவர்கள் மறக்காமல் இருப்பதற்காக அடிக்கடி கூறி வருகிறது. அதோடு தைவானைச் சுற்றி விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பி தொடர்ந்து மிரட்டி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் பெய்ஜிங்கின் நவீனமயமாக்கும் ராணுவத் திட்டங்கள் குறித்து தைவான் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, 2027ஆம் ஆண்டுக்குள் தனது நாட்டின் மீது படையெடுக்கும் ஆற்றல் ஸியின் சீன அரசாங்கத்துக்கு இருக்காது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

“தைவான் தொடர்ந்து தனது தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்தி சீனாவின் படையெடுப்பை தாமதப்படுத்தி வரும்,” என்று தைவானின் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார்.

“வெகு சீக்கிரத்தில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் சீனாவின் படையெடுப்பு நடக்க வாய்ப்பு இல்லை,” என்றார் அவர்.

“தைவான் நிலத்தில் இறங்க சீனா விரும்பினாலும் அதற்கான ஆற்றல் 2027ஆம் ஆண்டுக்குள் அதற்கு இருக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.

திரு கூ, எப்போது சீனா தாக்கக்கூடும் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பெய்ஜிங் தைவானுக்கு எதிராக படையெடுப்புக்குத் தயாராவதைப் பார்க்க முடியவில்லை என்று திரு கூ தெரிவித்தார்.

சீனா, அடுத்த ஆண்டு அதன் பொருளியலில் நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்நோக்குகிறது. உலகமும் அமெரிக்க தேர்தல், ஐரோப்பா, மத்திய கிழக்கில் போர் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியுள்ளது என்று அவர் காரணம் கூறினார்.

சீன அதிபர் ஸி, 2027ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த படையை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். தைவான், சீனாவிலிருந்து 160 கிலோ மீட்டர் கடல் தொலைவில் உள்ளது. அந்த இடைவெளியில் தைவானை தனது வசமாக்க சீனா விரும்புகிறது.

சீனா, உலகிலேயே ஆகப்பெரிய கடற்படையில் பல போர்க் கப்பல்களை வைத்துள்ளது. ஆனால் இதுவரை அதன் படை சோதிக்கப்படவில்லை.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை போன்ற நடமாடும் ஆயுதங்கள், ஹிமார்ஸ் ஏவுகணை, வானூர்திகள், ஜேவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தனது நாடு பயன்படுத்தும் என்று தைவானின் தற்காப்பு நிபுணர் திரு கூ மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்