மியன்மார் ராணுவம் மீது புதிய தாக்குதல்; பல்லாயிரம் பேர் இந்தியாவுக்குள் தஞ்சம்

யங்கூன்: மியன்மாரில் சிறுபான்மை இன சமூகத்தைச் சேர்ந்த போராளிக் குழுக்கள் திங்கட்கிழமையன்று பல அராசாங்க ராணுவச் சாவடிகளைத் தாக்கியதாக அங்கு வசிப்போர், போராளிகள், அரசு அதிகாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் ராணுவத்துக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையேயான போர் இரண்டு புதிய முனைகளில் பரவிய நிலையில், பல்லயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி அண்டை நாடான இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்நாட்டில் ராணுவ ஆட்சி மன்றம் அதிகாரத்தை 2021ஆம் ஆண்டு கைப்பற்றிய பின் அங்கு மூன்று சிறுபான்மை இன போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து அக்டோபர் தாக்குதல் மாதம் நடத்தி சில நகரங்களையும் ராணுவச் சாவடிகளையும் கைப்பற்றியுள்ளன.

இதனால் அந்நாதட்டு ராணுவம் தற்பொழுது தனது ஆட்சி அதிகாரத்துக்கு மிகப் பெரிய சவாலை எதிர்நோக்குவதாக கூறப்படுகிறது.

நிலப்பரப்பில் ஃபிரான்ஸ் அளவில் இருக்கும் மியன்மாரில், தற்போதைய புரட்சியை சரிவர எதிர்கொள்ளத் தவறியதால் நாடு துண்டாடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் பதவியில் அமர்த்தியுள்ள அதிபர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மியன்மாரின் சின் மாநிலத்தில் ராணுவ ஆட்சி மன்றத்துக்கு எதிராக போரிடும் கிளர்ச்சிப் படையினர் இரண்டு ராணுவச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்தியாவுடனான எல்லைப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் தாங்கள் இறங்கியுள்ளதாக கிளர்ச்சிப் படையின் மூத்த தளபதி ஒருவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!