டெக்சஸ் மாநிலத்தில் தாயும் சேயும் செல்லும் பள்ளி

1 mins read
9f21841d-500f-4cf8-ba21-9c46e4db845a
டெக்சஸ் மாநிலத்தின் லின்கன் பார்க் உயர்நிலைப் பள்ளி, 14 முதல் 22 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகளையும் இளம் தாய்மாரையும் மாணவர்களாக ஏற்றுக்கொள்கிறது. - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டெக்சஸ்: அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், ஒன்றரை ஆண்டுக்குமுன் அளித்த வழிகாட்டுதலின்படி, டெக்சஸ் மாநிலம், பெண்கள் கருத்தடை செய்துகொள்வதைத் தடைசெய்தது.

அந்தத் தீர்ப்பு, குழந்தைப் பராமரிப்பைக் கேள்விக்குறியாக்கி, மழலைக் கல்வி ஆசிரியர்கள் கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்கவைத்துவிட்டது.

பள்ளிகளுக்குச் செல்லும் பதின்ம வயதில் கருத்தரித்துக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்கள், தங்கள் கைக்குழந்தைகளைப் பள்ளியிலேயே பராமரிக்க நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்குச் செல்லும் பேருந்துகளிலும் தாய்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேவைப்படும்போது உடனே பார்த்துக்கொள்ளும் வசதியுடன் தங்கள் வகுப்பறைகளுக்கு அருகிலேயே குழந்தைகள் இருப்பது, தங்களுக்கு ஆறுதலாக உள்ளதாக இளம் தாய்மார்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்