மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ சிட்டியின் மத்தியப் பகுதியில் வியாழக்கிழமை பெரிய அளவிலான தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடிவந்த வேளையில், அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
சில கிலோமீட்டர் தொலைவிலிருந்து புகையைக் காணமுடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
டெப்பிட்டோ மாவட்டத்தில், நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையப்பகுதியில் உள்ள பண்டகசாலை ஒன்றில் தீ ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
தீச்சம்பவத்தில் எவரும் மாண்டதாகத் தகவல் இல்லை என்றும் நூற்றுக்கணக்கானோர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் மெக்சிகோ நகரக் குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘எக்ஸ்’ சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்தனர்.