ஆஸ்திரேலிய முக்குளிப்பாளர்கள் சீன ஆழ்கடல் அதிர்வொலிக் கருவிகளால் காயமடைந்தனர்.

ஆஸ்திரேலிய முக்குளிப்பாளர்கள் சீன ஆழ்கடல் அதிர்வொலிக் கருவிகளால் காயமடைந்தனர்.

1 mins read
9548146d-afd6-4c01-ab94-9b64a9a333d7
முக்குளிப்பாளர்கள் இருக்கும் பாதையை தவிர்க்கும்படி கொடுக்கப்பட்ட வேண்டுகோளை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தாக்குதல் கப்பல் நிராகரித்ததாக ஆஸ்திரேலிய தற்காப்பு மைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறினார். - படம் ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கேன்பரா: ஜப்பானின் பொருளாதார எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் ஆஸ்திரேலிய ராணுவக் கப்பலான “ஹெச்எம்எஸ் தூவூம்பா”வின் அடியில் இயந்திர காற்றாடியில் (பிராப்பெல்லர்) சிக்கியிருந்த மீன்பிடி வலைகளை முக்குளிப்பாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஐக்கிய நாட்டு நிறுவனம் சில காரணங்களால் ஏற்படுத்தியிருக்கும் கடல்வழித் தடைகளை ஆதரிக்கும் வகையில் நவம்பர் 14 முதல் ஆஸ்திரேலிய ராணுவக் கப்பல் அங்கு பணியில் இருந்துவருகிறது.

சீன தாக்குதல் கப்பல் ஆழ்கடல் அதிர்வொலிக் கருவிகளை பயன்படுத்தியதால் முக்குளிப்பாளர்கள் பணிமுடிந்து வெளியில் வந்தபோது மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. பாதுகாப்பற்ற முறையற்ற செயல் என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சின் அலுவலகம் இச்சம்பவத்தை வர்ணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ராணுவம்கப்பல்கடற்படை