வான்குடையில் பறக்கும் விளையாட்டில் பெண் மரணம்

வான்குடையில் பறக்கும் விளையாட்டில் பெண் மரணம்

1 mins read
2c654c4e-5ffa-4239-bc1f-ecd6f5cadf31
தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டம் உள்ளூர், வெளிநாட்டுப் பயணிகளிடையே பிரபலமாக விளங்குகிறது. - கோப்புப் படம்: விக்கிமீடியா காமன்ஸ்/ மிக்கிடிஸ்னி

தைப்பே: தைவானில் பாராசூட் விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்ட 27 வயது இளம்பெண் ஒருவர் பத்து மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

சியாயி என்ற நகரத்தைச் சேர்ந்த ஹிசியோவுக்கு பாராகிளைடிங் எனப்படும் பாராசூட்டில் பறப்பது உற்சாகமான விளையாட்டாகும்

தைவானின் ஆகப்பெரிய சுற்றுலாத் தலமான ஹுவாலியன் மாவட்டம், ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், இம்மாதம் 18ஆம் தேதியன்று பாராசூட் விளையாட்டில் ஈடுபடுவதற்காக ஹிசியோ அங்கு சென்றார். ‘யே’ என்பவர் அவருக்குப் பயிற்சியாளராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவத்தின்போது ஒரு நிமிடம் பறந்தவுடன் ஹுசியோவைப் பிடித்திருந்த இறுக்கை வார் அறுந்தது. இதனால் அவர் பத்து மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

கடலோர மாநில நெடுஞ்சாலை 11ல் 37 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடத்தில் அவர் கீழே விழுந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஹுவாலியன் மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

திரு யே வழக்கறிஞர்களால் விசாரிக்கப்பட்டு நவம்பர் 19ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்